இறுதி போட்டிக்கு முன்னேறினார் தமிழக செஸ் வீரர் பிரஞானந்தா..!

உலக கோப்பை செஸ் தொடர் போட்டி அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்றது. இந்த அரை இறுதி போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னை சேர்ந்த  பிரஞானந்தா

pragnanantha

உலக கோப்பை செஸ் தொடர் போட்டி அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்றது. இந்த அரை இறுதி போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னை சேர்ந்த  பிரஞானந்தா அமெரிக்காவின் பேபியோனா கருணாவுடன்  மோதினார். இந்த நிலையில்,  முதல் ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் 78-வது காய் நகர்தலில் டிரா செய்தார்.

இந்த நிலையில், நேற்று  முன்தினம் அரை இறுதி சுற்றின் 2-வது ஆட்டம் நடைபெற்றது. இதில் வெள்ளை நிற காய்களுடன் பிரக்ஞானந்தா  47-வது காய் நகர்தலுக்கு  பின் இந்த ஆட்டமும் டிரா ஆனது. இதனையடுத்து, டை-பிரேக்கர் சுற்று நடத்தப்பட்டு, இதில் வெற்று பெறுவோர் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை உருவானது. இந்த டை-பிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தா, உலகளவில் மூன்றாம் இடத்தில் உள்ள வீரரான ஃபேபியானோ கருணாவை எதிர்கொண்டு விளையாடினார்.

இதில், கருணாவை 3.5-2.5 புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி பிரக்ஞானந்தா இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறார். இந்த இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா மேக்னஸ் கார்ல்சனுடன் மோத இருக்கிறார்.