தடுப்பூசிக்கு செலுத்தாத ஆசிரியர்கள் பணிக்கு வர தடை – இஸ்ரேல்!

Teachers who do not pay for the vaccine are banned from coming to work in Israel.

இஸ்ரேலில் தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்கள் பணிக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து பரவிக் கொண்டே இருக்கும் நிலையில், பல்வேறு நாடுகளிலும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு செலுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த பல மாதங்களாக உலகின் பல பகுதிகளிலும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையிலேயே இருந்தது, தற்போது தான் சில நாடுகளில் இயல்பு நிலை சற்றே திரும்பி வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேலில் தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்கள் பள்ளிக்குள்  நுழைவதற்கு தடை விதிக்கப்படும் என இஸ்ரேலிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 84 மணி நேரத்திற்கு முன்பே விரைவான ஆண்டிஜன் சோதனை அவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும், இந்த கட்டுப்பாடுகளுக்கு எல்லாம் உட்படாத பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது அல்லது பள்ளியில் கற்பிப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.