பப்புவா நியூ கினியாவின் தலைநகரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஓசியானியாவில் உள்ள பப்புவா நியூ கினியாவின் தலைநகரமான போர்ட் மோர்ஸ்பியில் இன்று (திங்கள் கிழமை) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 7.2 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பப்புவா நியூ கினியாவின் தலைநகரமான போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே 715 கிமீ தொலைவில், 80 கிமீ ஆழத்தில் தாக்கியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் மற்றும் பொருள்சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்திற்குப் பிறகு சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
unknown node