ஜப்பானின் டோக்கியோவில் 6.1 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 என்ற அளவில் பதிவாகியுள்ளது என நில அதிர்வுக்கான தேசிய மையம் (National Center for Seismology) தெரிவித்துள்ளது.
இன்று மாலை 3.25 மணியளவில் டோக்கியோவிற்கு தென்கிழக்கே ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் 65 கிமீ ஆழத்தில் தாக்கியுள்ளது. இதனால் டோக்கியோவில் உள்ள கட்டிடங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. மேலும், சேதங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
unknown node