அதிகாலையில் பிரான்ஸில் புகழ்பெற்ற தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து

பிரான்ஸில் உள்ள நானெட்ஸ் நகரில்  15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட செயின்ட் பீட்டர் அண்ட் செயின் பவுல் என்ற பழமையான தேவாலயம் உள்ளது. இந்நிலையில்,  இந்த

பிரான்ஸில் உள்ள நானெட்ஸ் நகரில்  15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட செயின்ட் பீட்டர் அண்ட் செயின் பவுல் என்ற பழமையான தேவாலயம் உள்ளது. இந்நிலையில்,  இந்த தேவாலயத்தில் நேற்று அதிகாலை திடீரென தீ பிடித்தது. தகவல் அறிந்த 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும்  தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சில மணி நேரமாகப் போராடி தண்ணீரை கொண்டு  தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

அதிகாலையில் தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பொதுமக்கள்  யாருமில்லை. இதனால் உயிரிழப்பு போன்ற அசம்பாவிதங்கள் நடைபெற்றவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள  நோட்ரே டேம் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது  என்பது குறிப்பிடத்தக்கது.