பிரேசிலில் கொரோனாவை வென்று வீடு திரும்பிய 97 வயது மூதாட்டி.!

உலகையே அச்சுறுத்தி வரும்  கொரோனா வைரசால் இதுவரை உலகம் முழுவதும் 119,718 பேர் உயிரிழந்துள்ளனர்.  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்கி உள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும்  கொரோனா வைரசால் இதுவரை உலகம் முழுவதும் 119,718 பேர் உயிரிழந்துள்ளனர்.  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்கி உள்ளது.இந்தகொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள் என புள்ளி விவரங்கள் கூறுகின்றனர். 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்  கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்கள் உயிர் பிழைப்பது கடினம் என கூறப்படுகிறது.ஆனாலும்  சில நாடுகளில் 90 வயதை கடந்த  சில முதியவர்களும் கொரோனாவிற்கு  எதிரான போராட்டத்தில்   மீண்டு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.இந்நிலையில் பிரேசில் நாட்டில் சா பாலோ நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட  97 வயதான மூதாட்டி ஒருவர் வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக குணமாகி வீடு திரும்பியுள்ளார்.அந்த மூதாட்டி வீடு திரும்பிய போது மருத்துவ ஊழியர்கள் இருபுறமும்  நின்று கை தட்டி அவரை வழியனுப்பி வைத்தனர்.