மேம்பாலத்தில் இருந்து கவிழ்ந்து விழுந்த பேருந்து – 7 பேர் பலி, 28 பேர் காயம்!

Seven people have been killed and 28 others injured in a bus crash on a flyover in Pakistan.

பாகிஸ்தானில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து கீழே விழுந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 28 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் கராச்சி பகுதியில் இருந்து சாக்வால் மாவட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்தின் டயர் திடீரென வெடித்துள்ளது. இதனால் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. இந்த விபத்தின் போது பேருந்தில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 28 பேர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திலேயே 5 பயணிகள் உயிரிழந்ததாகவும், 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்  உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் சாலைகள் மோசமாக இருப்பது தான் இந்த விபத்திற்கு காரணம் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.