இத்தாலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சர்க்கஸ் பயிற்சியாளரின் கழுத்தை கடிக்கும் புலியின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
இத்தாலியில் உள்ள லீஸ் மாகாணத்தில் சர்க்கஸ் நிகழ்ச்சியானது நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் சர்க்கஸ் பயிற்சியாளர் இவான் ஓர்ஃபி இரண்டு புலிகளை வைத்து நிகழ்ச்சி மேற்கொண்டுள்ளார். வீடியோவில் சர்க்கஸ் பயிற்சியாளர் இவான் ஓர்ஃபி மற்றொரு புலி மீது கவனம் செலுத்துகிறார்.
இரண்டாவது புலி இவான் ஓர்ஃபியின் பின்னால் இருந்து தாக்குவதை காணலாம். தன் மீது பாய்ந்த புலியிடம் இருந்து தன்னை விடுவித்து கொள்ள போராடும் போழுது அவரது கழுத்தை புலி கடித்தது. பின்னர் புலியிடம் இருந்து மீட்கப்பட்டு இவான் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
unknown node