தாயைக் கொலை செய்து நாயுடன் சாப்பிட்ட கொடூர மகன் ..!

ஸ்பெயினில் 28 வயதான ஒரு நபர் தனது தாயைக் கொன்று 1,000 துண்டுகளாக வெட்டியதாக வழக்கு விசாரணையில் உள்ளார். அவர் தனது தாயின் உடலை உணவு பெட்டியில் வைத்து

ஸ்பெயினில் 28 வயதான ஒரு நபர் தனது தாயைக் கொன்று 1,000 துண்டுகளாக வெட்டியதாக வழக்கு விசாரணையில் உள்ளார். அவர் தனது தாயின் உடலை உணவு பெட்டியில் வைத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. ஆல்பர்டோ குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆல்பர்டோ-க்கு சிறைத்தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.

ஆல்பர்டோ தாயார் மரியா சோலெடாட் 68 வயது. கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி அன்று போலீஸ் அதிகாரிகள் ஆல்பர்டோவின் வீட்டிற்கு வந்தபோது, என் அம்மா இங்கே இருக்கிறார். இறந்துவிட்டார். நானும் எனது நாயும் என் தாய் உடலை  சாப்பிடுகிறோம் என்று ஆல்பர்டோ கூறினார். அப்போது தன்னை கைது செய்த பொலிஸ் அதிகாரிகளிடம் ஆல்பர்டோ கூறுகையில், பதினைந்து நாட்களுக்கு மேலாக எனது தாயை தனது செல்ல நாயுடன் சாப்பிட்டு வருவதாக கூறினார்.

மரியாவின் உடல் குளிர்சாதன பெட்டியில் இருந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆல்பர்டோக்கு அவரது தாய்க்கும் அடிக்கடி சன்டை வரும் என கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் ஏற்பட்ட ஒரு வாக்குவாதத்தில் ஆல்பர்டோ தனது தாயை கழுத்தை நெரித்து கொலை செய்து இருக்கலாம் என  சந்தேகிக்கப்படுகிறது.

நேற்று ஆல்பர்டோ தனது தாயைக் கொல்லும்படி பல குரல்களைக் கேட்டதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். டிவி பார்க்கும் போது இந்த குரல்களைக் கேட்டதாக கூறினார். எவ்வாறாயினும், தனது தாயைத் தாக்கியதையோ, அவரை  வெட்டியதையோ, அல்லது அவரை சாப்பிட்டது எதுவும் தனக்கு நினைவில் இல்லை என்று அவர் கூறினார். இதனால் ஆல்பர்டோ மனநல பரிசோதனைக்கும் உட்பட்டுள்ளார். முடிவுகள் இன்னும் வரவில்லை.