Condom [file image]
லண்டன் : உடலுறவின் போது ரகசியமாக ஆணுறையை கழற்றிய நபருக்கு நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தெற்கு லண்டனில் உள்ள பிரிக்ஸ்டன் பகுதியில் வசித்து வரும் கை முகேந்தி (39) என்ற நபர் ஒரு பெண்ணுடன் உடலுறவு வைத்து கொள்ள நினைத்துள்ளார். ஆணுறை பயன்படுத்தி அந்த பெண் உடலுறவு கொள்ளவும் ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து, உடலுறவின் போது, கை முகேந்தி ரகசியமாக ஆணுறையை கழற்றி உள்ளார். இதனை கண்ட அந்த பெண் சற்று அதிர்ச்சி அடைந்து காவல்துறையில் புகார் அளித்தார். பாதிக்கப்பட்ட அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். பாதிக்கப்பட்டவரின் உதவியுடன் தடயவியல் ஆதாரங்களையும் அதிகாரிகள் சேகரித்தனர்.
பின் இந்த வழக்கு லண்டன் கிரவுன்நீதிமன்றத்திற்கு வந்த நிலையில், ஜூன் 13 அன்று பெண்ணின் அனுமதியின்றி உடலுறவின் போது அணிந்திருந்த ஆணுறையை அகற்றியதற்காக கை முகேந்திக்கு சிறை தண்டனை வழங்கியது. லண்டனில் பொருந்தும் தனியான சட்டங்களின் கீழ் ஆணுறை அகற்றுதல் கற்பழிப்புக்கு சமம் என்று கூறப்படுகிறது. எனவே, அதன் அடிப்படையில், கை முகேந்திக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பெண்ணின் அனுமதி இல்லாமல் ஆணுறையை அகற்றிய இந்த வழக்கில் முகேந்திக்கு 4 ஆண்டுகள் 3 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி லண்டன் கிரவுன் கோர்ட்டில் முகேந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். பின் ஜூன் 13, வியாழன் அன்று அதே நீதிமன்றத்தில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது .
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி…