உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 32 லட்சத்தை நெருங்கியது

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  31,90,743 ஆக அதிகரித்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  31,90,743 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதன் விளைவாக நாளுக்கு நாள் பரவல், பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.எனவே இதனை தடுக்க பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி,31,90,743 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு  9,72,124 பேர் குணமடைந்துள்ளனர்.2,27,368 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அங்கு  10,63,600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.61,472 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 2,12,917 பேர் பாதிக்கப்பட்டு  24,275 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் 2,03,591 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.27,682 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.