இத்தாலியில் பலியானோர் எண்ணிக்கை 1268 ஆக உயர்ந்தது.!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தினமும் உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வருகிறது.கொரோனா வைரஸ் சீனா அடுத்து  ஈரான்,

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தினமும் உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வருகிறது.கொரோனா வைரஸ் சீனா அடுத்து  ஈரான், இத்தாலி  ஆகிய நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால்  175 பேர் பலியாகி  1,268 ஆக  உயர்ந்துள்ளது.  மேலும் 3,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 17,660 -லிருந்து 21,157 ஆக உயர்ந்துள்ளது.

இத்தாலியில்  வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனாலும் பலி எண்ணிக்கை, மற்றும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.இதையெடுத்து பொதுமக்கள் அவசர வேலை தவிர பிற காரணங்களுக்காக தாங்கள் வசிக்கும் இடங்களில் இருந்து மற்ற இடங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.