கொரோனா தடுப்பூசி குப்பியை தவறுதலாக உடைத்த செவிலியர்...! தவறை மறைக்க செவிலியர் செய்த செயல்...!

A nurse accidentally breaks a vial of the Pfizer-Bioentech vaccine in Germany.

ஜெர்மனியில் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் ஒரு குப்பியை செவிலியர் ஒருவர் தவறுதலாக உடைத்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை அழிக்க தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது நிலையில், உலகில் பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜெர்மனியில் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் ஒரு குப்பியை செவிலியர் ஒருவர் தவறுதலாக உடைத்துள்ளார். இதனை அதிகாரிகளுக்கு மறைப்பதற்காக, தடுப்பூசிக்கு பதிலாக 6 பேருக்கு குளுக்கோஸ் மருந்தை செலுத்தியுள்ளார்.

இவர் தன்னுடன் பணிபுரியும் சக ஊழியரிடம் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், தற்போது இவரது இந்த செயல் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் செஞ்சிலுவை சங்க தடுப்பூசி மையத்தில் டோஸ் வழங்கப்பட்ட 200 பேரை அதிகாரிகள் பரிசோதிக்க முன்வருமாறு அழைத்துள்ளனர்.  இந்த செயல் குறித்து அப்பெண்  கூறுகையில், “கைவிடப்பட்ட குப்பியைப் பற்றி யாருக்கும் தெரியப்படுத்தாமல்இருக்கவே, இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.