அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இருந்து அங்கோரேஜ் என்ற இடத்திலிருந்து உனாலஸ்கா தீவிலுள்ள டச்சு ஹார்பருக்கு பென் ஏர்வேல் விமானம் சென்றது. இந்த விமானத்தில் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் உட்பட 38 பேர் பயணம் செய்தனர்.இந்த விமானம் டச்சு ஹார்பர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது நிலைதடுமாறி ஓடுபாதையை தாண்டி சென்றது. இதனால் அருகிலிருந்த ஆற்றின் கரையில் வேகமாக மோதி நின்றது. நல்லவேளையாக விமானம் ஆற்றுக்குள் செல்லாததால் விமானத்தில் இருந்த அனைவரும் உயிர்தப்பினர்.
unknown nodeபின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விமான நிலைய ஊழியர்களும் , தீயணைப்பு படை வீரர்களும் விமானத்தில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்துக்கான காரணத்தை விசாரணை நடத்தி வருகின்றனர்.