கொரோனா ரிசல்ட்டை பார்த்து வாய் பிளந்த நபர்...? காரணம் தெரியுமா...?

The American was shocked to learn that he was charged $ 54,000 for a PCR test.

அமெரிக்க நபருக்கு PCR சோதனைக்காக  54,000 டாலர் கட்டணமாக வசூலிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்துள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கொரோனா பரிசோதனை மையம் ஒன்றிற்கு டிராவிஸ் வார்னர் என்பவர் சென்றுள்ளார். அப்பொழுது அவர் அங்கு தனக்கான கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இந்த சோதனைக்காக அவரிடம் 54 ஆயிரம் டாலர் கட்டணமாக கேட்கப்பட்டுள்ளது.

அதாவது இந்திய மதிப்பில் 40 லட்சம் ரூபாய். இதனால் அவர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார். இது போல ஏற்கனவே அமெரிக்காவில் கொரோனா பரிசோதனைக்காக அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படும் நிகழ்வுகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், வழக்கமாக அமெரிக்காவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு 8 டாலர் முதல் 15 டாலர் வரை தான் வசூலிக்கப்படுமாம்.