பிளாஸ்டிக் துப்பாக்கியால் அமெரிக்க உணவகத்தை கொள்ளையடிக்க முயன்ற நபரை வடிக்கையாளரே சுட்டுக்கொன்றார்.
கடந்த வாரம் அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஒரு உணவகத்தில் போலி துப்பாக்கியை காட்டி கொள்ளையடிக்க முயன்ற நபர், அங்கிருந்த வாடிக்கையாளர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஹூஸ்டனில் உள்ள மெக்சிகன் உணவகமான Ranchito Taqueira-ல் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், மாஸ்க் அணிந்த நபர் வாடிக்கையாளர்களை நோக்கி துப்பாக்கியை காட்டுவதைக் காட்டுகிறது, அவர்களில் பலர் மேசைகளுக்கு அடியில் குனிந்து பணம் கேட்பதைக் காணமுடிகிறது. அவர் உணவகத்தை விட்டு வெளியேறும்போது, ஒரு வாடிக்கையாளர் பின்னால் இருந்து தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து கொள்ளையடிக்க வந்த நபரை சுட்டுள்ளார்.
உணவகத்தில் இருந்தவர்களின் அலறல்களுக்கு மத்தியில் அந்த நபர், அவரை மேலும் எட்டு முறை சுட்டுக் கொண்டிருந்தபோதும் திருடன் உடனடியாக தரையில் விழுந்துள்ளார். பின்னர் கொள்ளையடிக்க வந்த நபரை வாடிக்கையாளர் ஒன்பாவது முறையாக சுட்டு கொல்லப்பட்டார்.
திருடன் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, இப்போது பரவாயில்லை என்று உணவகத்தில் இருந்த அனைவரையும் வாடிக்கையாளர் சமாதானப்படுத்தியதாகத் தெரிகிறது. மேலும், கொள்ளையனின் ஆயுதம் பிளாஸ்டிக் துப்பாக்கி என போலீசாரால் தெரியவந்தது.
unknown node