சீனாவில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தகனம் செய்யப்பட்ட நபர் உயிருடன் வந்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சீனாவில் சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் இறந்ததாக தகனம் செய்யப்பட்ட நபர் உயிருடன் வந்துள்ளார். சீனாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூவோ காங்லுவோ (Zhuo Kangluo) என்ற நபர் கார் விபத்தில் இறந்தார். பின்பு காங்லுவோவின் உடல் சாலை ஓரத்தில் கிடந்ததை கண்ட குடும்பத்தினர் இறந்தவர்களுக்கு செய்யவேண்டிய சடங்குகளை செய்தனர். ஜூவோவின் மருமகன் உள்ளிட்ட அவருக்கு நெருக்கமான அனைவரும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.
இதையடுத்து ஜுவோவின் உடல் பிரேத பரிசோதனை செய்யாமல் தகனம் செய்யப்பட்டது. ஒன்பது வருடங்கள் கழித்து அவர்களது கிராமத்தில் விசித்திரமாக நடந்து கொள்ளும் நபர் ஒருவரை கண்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அதிகாரிகள் அந்த நபரின் அடையாளத்தைக் கண்டறிய டிஎன்ஏ சோதனை செய்ய முடிவு செய்தனர்.
அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில், சோதனையில் யாரும் எதிர்பார்க்காத ஒன்று தெரியவந்தது. சோதனையில் அந்த நபர் ஜூவோ காங்லுவோ என்று அடையாளம் கண்டனர். பின்னர், அடையாளம் காண அவரை குடும்பத்தினரிடம் அழைத்துச் சென்ற நிலையில் ஜுவோவின் பேரன் அவரை அடையாளம் கண்டுகொண்டார். ஜுவோவை மீண்டும் சந்தித்தபோது அவரது உறவினர்கள் சந்தோஷம் அடைந்தனர்.