ஏர் இந்தியா விமானத்தின் விமானி, தனது பெண் நண்பரை அனுமதியில்லாமல் விமானத்தின் கட்டுப்பட்டு அறைக்கு அழைத்துவந்துள்ளார்.
விமானி ஒருவர் தனது பெண் நண்பரை அனுமதியில்லாமல் விமானத்தின் கட்டுபாட்டு அறைக்குள் (காக்பிட்) அழைத்துவந்துள்ளார். இந்த சம்பவம் பிப்ரவரி 27ம் தேதி துபாயில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் நடந்துள்ளது.
மேலும், நண்பரை விமானத்தின் கட்டுபாட்டு அறைக்குள் அனுமதியில்லாமல் அழைத்துவந்தது, பாதுகாப்பு விதிமுறை மீறல் என்று சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக டிஜிசிஏ தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, விமானி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாரா.? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. கடந்த வாரம், டிஜிசிஏ ஒரு அறிக்கையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் உள்நாட்டு விமான நிறுவனங்களால் பெறப்பட்ட மொத்த 347 பயணிகளின் புகார்களில் பெரும்பாலானவை விமானப் பிரச்சனைகள் என்பது குறிப்பிடத்தக்கது.