துருக்கி அதிபருக்கு மீசை வரைந்த சிறுவனை கைது செய்த போலீசார்..!

Boy arrested for drawing mustache on photo of Turkish President Ergoden

Arrest

துருக்கி அதிபர் எர்கோடன் புகைப்படத்தின் மீது மீசை வரைந்த சிறுவன் கைது.

துருக்கி அதிபர் எர்கோடன் மூன்றாவது முறையாக அந்நாட்டின் அதிபராக பதவி ஏற்றுள்ளார். இவர் கடந்த 20 ஆண்டுகளாக பதவியில் இருந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அதிபர் எர்கோடன் புகைப்படத்துடன் சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.

இந்த சுவரொட்டியில் 16 வயது சிறுவன் ஒருவன் ஹிட்லரை போன்ற மீசையை துருக்கி அதிபர் எர்கோடனுக்கு வரைந்துள்ளார். மேலும் அதில் அவதூறான கருத்துக்களை எழுதியதாகவும் கூறப்படுகிறது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் சிறுவன் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

சிறுவனின் வீட்டை கண்டுபிடித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில்,  சிறுவன் மீசை வரைந்ததாக ஒப்பு கொண்டுள்ளார்.  இதனையடுத்து அந்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது அதிபரை அவமதித்தது தொடர்பாக தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.