இந்தியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்- சிங்கப்பூர் அரசு...!

The Singapore government has announced new restrictions on Indians due to the spread of the coronavirus.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிங்கப்பூர் அரசு,  இந்தியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கடந்த 24 நேரத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 லட்சத்தை நெருங்கியுள்ளது.

இதன் காரணமாக,ஹாங்காங்,நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் இந்தியர்கள் தங்கள் நாட்டிற்கு வருவதற்கு தடை விதித்துள்ளது. மேலும்,ரஷ்யாவும் இந்தியர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது சிங்கப்பூரும், இந்தியாவில் இருந்து கட்டுமானம் உள்ளிட்ட பணிகளுக்கு வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஆனால் இதற்கு முன்னர்,இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்பவர்கள் அங்குள்ள தனிமைப்படுத்தும் மையங்களில் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்பது ஏற்கனவே நடைமுறையில் இருந்துள்ளது.

இந்த நிலையில்,வருகின்ற ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு செல்பவர்கள் 14 நாட்கள் அரசின் கொரோனா மையங்களில் தனிமையில் இருப்பதுடன்,மேற்கொண்டு 7 நாட்கள் தங்களது வீட்டிலும் தனிமையில் இருக்க வேண்டும் என்றும்,மேலும்,இந்தக் கட்டுப்பாடானது தற்போது கொரோனா தனிமைப்படுத்துதல் மையங்களில் இருப்பவர்களுக்கும் பொருந்தும் எனவும் சிங்கப்பூர் அரசு புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.

இதனையடுத்து,மொத்தம் 21 நாட்கள் தனிமைப்படுதலுக்கு பிறகு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் எனவும் சிங்கப்பூர் அரசு கூறியுள்ளது.