ஒரு பெண் தன்னைத்தானே திருமணம் செய்துகொண்டு விவாகரத்து செய்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஒரு பெண் தன்னைத்தானே திருமணம் செய்துகொண்டு, 24 மணி நேரத்தில் அவரை விவாகரத்து செய்துள்ளார். 25 வயதான சோஃபி மௌரே என்ற பெண் தன்னைத்தானே திருமணம் செய்துகொண்டதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். அதில், அவர் ஒரு வெள்ளை திருமண ஆடை மற்றும் தங்க தலைப்பாகை அணிந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார்.
unknown nodeஅவரது திருமணத்திற்காக அவரே திருமண கேக்கை தயார் செய்துள்ளார். சோஃபி தனது பதிவில், “இன்று என் வாழ்க்கையின் மிக மோசமான தருணங்களில் ஒன்று. இனி என்னால் இதை தாங்க முடியாது. என்று கூறியதோடு நான் ஒரு திருமண ஆடையை வாங்கி என்னை திருமணம் செய்து கொள்ள ஒரு திருமண கேக்கை தயார் செய்தேன்” என்று கூறியுள்ளார்.
unknown nodeசோஃபியின் பதிவிற்கு நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் சோஃபியை “தயவு செய்து நல்ல மனநல மருத்துவரை அணுகுமாறு” கூறியுள்ளார். மற்றொருவர், “இந்த அழகான திருமணத்திற்கு எனது வாழ்த்துக்கள்” என்று கூறினார்.
unknown node