இவர் எனது கணவர், தந்தை அல்ல – 28 வயது பெண்மணி பதிவு!

Everyone thinks of themselves as father and daughter who live happily despite the gap of 48 years between her husband and herself, but it is wrong that a woman as we husband and wife has spoken on her social media page.

தனது கணவருக்கும் தனக்குமான இடைவெளி 48 வருடங்கள் இருந்தாலும் சந்தோஷமாக வாழ்ந்து வரும் தங்களை தந்தை மகள் என அனைவரும் நினைப்பதாகவும், ஆனால் அது தவறு நாங்கள் கணவன் மனைவி என பெண்மணி ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பேசியுள்ளார்.

பெரும்பாலும் தங்களை விட சற்று வயது அதிகமாக இருப்பவர்களை தான் பெண்கள் திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் பத்து வயதிற்கு அதிகமாக இருந்தாலே இவ்வளவு பெரியவரை திருமணம் செய்து கொள்கிறாயா என்று அனைவரும் கேட்க தொடங்கிவிடுவார்கள். ஆனால் கெல்சி எனும் 28 வயதுடைய பெண்மணி ஒருவர் தன்னைவிட 48 வயது அதிகம் உள்ள 76 வயது வணிக புகைப்பட கலைஞர் போன்ஜி  என்பவரை திருமணம் செய்து உள்ளார். இவர்கள் இருவரும் தந்தை மகள் என அனைவரும் கூறுவதால், இல்லை இது எனது கணவர் என தனது வாழ்க்கை குறித்து சமூக வலைதள பக்கங்களில் பேசியுள்ளார் கெல்சி.

புகைப்பட கலைஞரான போன்ஜியோவானியின் மனைவி தனது 42 வயதில் மரித்துப் போயுள்ளார். இதனையடுத்து தனது மன அமைதிக்காக யோகா வகுப்புகளில் இவர் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது தான் கெல்சியை அவர் சந்தித்துள்ளார். இவர்கள் இருவரும் காதல் வயப்படவில்லை, ஆனால் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். நாளடைவில் வயது காதலுக்கு தடை இல்லை என நினைத்த இவர்கள் இருவருமே ஒன்றாக சேர்ந்து காதலர்களாக வாழ ஆரம்பித்துள்ளனர்.

தற்பொழுது கெல்சியும் போன்ஜியோவானியும் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். அவ்வப்போது வெளியில் சென்று தாங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடும் கெல்சியிடம் போன்ஜி அவரது தந்தை என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே கெல்சி தங்கள் வாழ்க்கை பயணம் குறித்து தற்போது பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது நாங்கள் வயதில் சற்று முரண்பாடானவர்களாக இருந்தாலும் நாங்கள் இருவரும் ஒன்றாக நன்றாக வாழ்கிறோம். நாங்கள் மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். ஆனால் எங்கள் இருவரையும் தந்தை மகள் என நினைத்துவிட வேண்டாம் நானும் போன்ஜியும் கணவன் மனைவி தான் எனக் கூறியுள்ளார்.