மத்தியப் பிரதேசத்தில் கொள்ளையடிக்க சுரங்கத்தில் நுழைந்த 4 பேர் உயிரிழப்பு.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஷாதோல் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் உள்ள இரும்பை கொள்ளையடிக்கும் முற்சித்த நான்கு பேர் உயிரிழந்தனர். ஷாதோல் மாவட்டத்தில் உள்ள கல்ரியில் மூடப்பட்ட நிலக்கரி சுரங்கத்தில் பழைய இயந்திரங்களில் இருந்து இரும்பு பொருள்களை திருடுவதற்காக நான்கு பேர் உள்ளே நுழைந்துள்ளனர்.
unknown node[Representative Image]
நீண்ட நேரமாகியும் 4 பேரும் திரும்பி வராததால் சுரங்கத்தின் வெளியே நின்று கொண்டிருந்த நபர் பயத்தில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். குடும்பத்தினருக்கு தகவல் தெரிந்ததையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்புக்குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
unknown node[Representative Image]
மீட்பு குழுவினர் நிலக்கரி சுரங்கத்திற்குள் இருந்த நான்கு பேரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். துரதிஷ்டவசமாக 4 பெரும் உயிரிழந்தனர். சுரங்கத்தில் இருந்து விஷ வாயு வெளியானதால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தகவல்கள் உள்ளன.