சுனாமி எச்சரிக்கை: தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.!

A tsunami alert has been issued following a magnitude 6.8 earthquake off the coast of Vanuatu in the southwestern Pacific Ocean.

தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் வனுவாட்டில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள வானூட்டு தீவில் 6.8 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையப் பகுதியிலிருந்து 185 மைல்களுக்குள் உள்ள கடற்கரைகளுக்கு அபாயகரமான அலைகள் அடிப்பதற்கு சாத்தியம் என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் தீவின் வடமேற்கில் 56 மைல் மற்றும் சுமார் 12 மைல் ஆழத்தில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. அப்பகுதியில் ஆரம்பத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 ஆகவும், ஆழம் 51.7 மைல்களாகவும் இருந்தது என யுஎஸ்ஜிஎஸ் கூறியிருந்தது என்பது குறிப்பிடபடப்படுகிறது.