துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,000-ஐ கடந்துள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இரண்டு நாடுகளும் நிலைகுலைந்த நிலையில் உள்ளது. அடுக்குமாடி கட்டங்கள் பல இடிந்து தரைமட்டமாகிய நிலையில், உறவுகளையும், உடைமைகளையும் இழந்து பரிதவிக்கும் நிலைக்கு இந்த இருநாட்டு மக்களும் தள்ளப்பட்டுள்ளனர்.
unknown nodeஇந்த நிலையில், உலக நாடுகள் இந்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இதுவரை இந்த இரண்டு நாடுகளிலும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,000-ஐ கடந்துள்ளது. மேலும் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.