ட்விட்டரின் நீலப்பறவை சிலை, ரூ.81 லட்சத்துக்கு ஏலம்.!

அமெரிக்க அலுவலகத்தில் இருந்து, ட்விட்டரின் நீலப்பறவை சிலை ஏலத்தில் ரூ.81 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளது.

அமெரிக்க அலுவலகத்தில் இருந்து, ட்விட்டரின் நீலப்பறவை சிலை ஏலத்தில் ரூ.81 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளது.

அமெரிக்காவிலுள்ள ட்விட்டர் நிறுவனத்தின், சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்தில் இருந்து, வாடகை பிரச்சனை காரணமாக இடம் மாறி வருவதால், ட்விட்டரின் தலைமை அலுவலகத்தில் இருந்து சமையலறைப் பொருட்கள், நினைவுப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், மரச்சாமான்கள் போன்ற சில அலுவலகப் பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டது.

இந்த ஏலத்தில் ட்விட்டரின் நீல நிறப்பறவை சிலையானது ஏலத்தில் ரூ.81 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளது. இந்த நான்கு அடி உயர பறவை சிலை ஏலத்தில் அதிக தொகைக்கு விற்கப்பட்ட, மிக விலையுயர்ந்த பொருள் என்று கூறப்படுகிறது.