ஜப்பானில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறினால் கடுமையான தண்டனை!

As the Japanese government tightens restrictions to prevent infection, it has also decided to punish violators.

தொற்றை தடுப்பதற்காக ஜப்பான் அரசு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்த கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு தண்டனை வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், தற்போது புதிய வகை கொரோனா வைரசும் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் சமீப நாட்களாக ஜப்பானில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கடந்த 7ஆம் தேதி முதல் அங்கு தினம்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதனை தடுப்பதற்காக அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்த கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு தண்டனை வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தொற்று கண்டறியப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற மறுத்தால் அவருக்கு சுமார் 7 லட்சம் வரை அபராதம் அல்லது ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும், நோயாளிகளுடனான தொடர்பாளர்களை கண்டறிவதில் தடை ஏற்படுத்துவோருக்கு மூன்றரை லட்சம் வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் சிறை வரையிலான தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஜப்பான் அரசு விதித்துள்ள தண்டனை முடிவுக்கு பல விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.