ஊதிய உயர்வு வேண்டும்..! நாடு தழுவிய போக்குவரத்து வேலைநிறுத்தம்..!

ஜெர்மனியில் நாடு தழுவிய 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜெர்மனியில் நாடு தழுவிய 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜெர்மனியில் நாடு பொது போக்குவரத்தை மையமாகக் கொண்டு நீண்ட காலமாக நிலவி வரும் ஊதிய உயர்வு பிரச்சனையின் காரணமாக தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தினால் ஜெர்மனியில் பெரும்பாலான பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்களின் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் சாலையில் நின்று, மஞ்சள் அல்லது சிவப்பு நிற ஜாக்கெட்டுகளை அணிந்து சைரன்கள் மற்றும் விசில்களை ஊதியபடி, கையில் பதாகைகளை ஏந்தி, கொடிகளை அசைத்தனர். இதனால் பிராந்திய ரயில்கள் மற்றும் உள்ளூர் பொது போக்குவரத்து அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதில் 30,000க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக இவிஜி (EVG) தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. தொழிலாளர் சங்கம் வெர்டி 10.5% ஊதிய உயர்வு வேண்டுமென்றும், அதேசமயம் ரயில்வே மற்றும் போக்குவரத்து தொழிற்சங்க இவிஜி தொழிற்சங்கம் மாதத்திற்கு 650 யூரோ ஊதிய உயர்வு வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளது.