உலகளவில் பலி 60 ஆயிரத்தை தாண்டியது..பாதிப்பு 11 லட்சத்தை கடந்தது.!

கொரோனா என்ற கோவிட் 19 வைரஸ் உலக முழுவதும் அதிகப்படியான நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலக நாடுகள் ஒன்றாக சேர்ந்து கொரோனா வைரஸ் பரவலை

கொரோனா என்ற கோவிட் 19 வைரஸ் உலக முழுவதும் அதிகப்படியான நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலக நாடுகள் ஒன்றாக சேர்ந்து கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்து போராடி வருகிறது. சீனாவை தொடர்ந்து இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, ஈரான், பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் உயிரிழப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. மருத்துவர்கள் நாடு விட்டு நாடு சென்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் உலகளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,32,017 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை60,331 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 2,35,902பேர் குணமடைந்துள்ளார்கள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிப்பு எண்ணிக்கை 2902 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆகவும், 184 பேர் வைரஸில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் :

நாடுகள்

பாதிப்பு

உயிரிழப்பு

குணமடைந்தவர்கள்

அமெரிக்கா

2,77,522

7,403

12,283

ஸ்பெயின்

1,24,736

11,744

34,219

இத்தாலி

1,19,827

14,681

19,758

ஜெர்மனி

91,159

1,275

24,575

பிரான்ஸ்

82,165

6,507

14,008

சீனா

81,639

3,326

76,755

ஈரான்

55,743

3,452

17,935

இங்கிலாந்து

38,168

3,605

135