உலக அளவில் கொரோனா உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 .70 லட்சத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டியுள்ளது.சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.இதன் விளைவாக நாளுக்கு நாள் பரவல்,பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, , 25 லட்சத்து, ஆயிரத்து, 920 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில்  16 லட்சத்து, 71 ஆயிரத்து, 223 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் சிகிச்சை பெற்றுவரும்   57 ஆயிரத்து, 617  பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த வைரசால்  ஆறு லட்சத்து, 58 ஆயிரத்து, 956 பேர் பேர் குணமடைந்துள்ளனர். 1,70,226  பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.