ஏடன் விமான நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு 26 பேர் உயிரிழப்பு ..50 பேர் காயம் ..!

The Yemeni government says 26 people have been killed and 50 injured in an airport bombing. No group is said to be responsible.

நேற்று தெற்கு ஏமன் நகரமான ஏடனில் உள்ள விமான நிலையத்தில் ஒரு பெரிய குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட ஏமன் அரசின் அமைச்சரவையில் இடம் பெற்றவர்களை ஏற்றிச் சென்ற விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்தில் இந்த வெடிகுண்டு சம்பவம் நடந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமான நிலைய குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50 பேர் படுகாயமடைந்துள்ளனர் என ஏமன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்க்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை, விமான நிலையத்தைத் தாக்கியதற்கு எந்தவொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை என கூறப்படுகிறது.