விலங்குகளின் கொடுமைப்படுத்தும் வகையில் இருக்கும் அனைத்து வீடியோக்களையும் நீக்க வேண்டும்!

The charity Lady Freethinker has demanded that all videos of animal cruelty wanted to be removed in youtube.

விலங்குகளின் கொடுமைப்படுத்தும் வகையில் இருக்கும் அனைத்து வீடியோக்களையும் நீக்க வேண்டும் என Lady Freethinker என்ற தொண்டு நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.

பொதுவாகவே நமக்கு நேரத்தை போக்க வேண்டும் என்றால் ஏதோ ஒரு படமோ, வெப் சீரியசோ பார்ப்பது வழக்கம். குறிப்பாக கொரோனா பரவும் நேரத்தில் இதுபோன்ற வெப் சீரியஸை அதிகளவில் பார்க்க தொடங்கினார்கள். அதுவும் இல்லையெனில், யூ-டியூப்பில் விடியோக்களை பார்த்து வந்தனர்.

தற்போதைய காலத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் யூ-டியூப்பில் அதிகளவில் நேரத்தினை செலவிட்டு வருகின்றனர். இந்தநிலையில், விலங்குகளின் கொடுமைப்படுத்தும் வகையில் இருக்கும் அனைத்து வீடியோக்களையும் நீக்குமாறு விலங்கு நல தொண்டு நிறுவனம், யூ-டியூபை கேட்டுக்கொண்டுள்ளது.

Lady Freethinker என்ற தொண்டு நிறுவனம், மூன்று மாதங்களாக நடத்திய ஆய்வின் மூலம் பொழுதுபோக்கிற்காக விலங்குகளை கொடுமைப்படுத்தும் வகையில் அமைந்த 2,053 வீடியோக்களைக் கண்டறிந்தது. அதில் விலங்குகள் பொழுதுபோக்குக்காக வேண்டுமென்றே விலங்குகளை தாக்கியும், கொடுமைப்படுத்துமாறு உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதனால் விலங்குகள் கடுமையான மன உளைச்சலுக்கும், உடல் வலிக்கும் அல்லது கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். இது போன்ற வீடியோக்கள், குறைந்தது 150 சேனல்களில் 1.2 பில்லியனுக்கும் அதிகமான மக்களாக பார்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.