12 மணி நேர வேலை சட்டமசோதா; இபிஎஸ் எதிர்ப்பு.!

12 மணி நேர வேலை சட்ட மசோதாவை, அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

12 மணி நேர வேலை சட்ட மசோதாவை, அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

தமிழக தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் விதமான, இந்த 12 மணிநேர வேலை சட்ட மசோதா, சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றியிருக்கிறார் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

முன்னதாக தமிழக அரசு நேற்று சட்டப்பேரவையில், தொழிற்சாலை சட்ட திருத்தம் செய்யும் சட்ட வரையறையை  கொண்டு வந்தது. இந்த மசோதா தொழிலாளர்களின் பணிநேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணிநேரமாக மாற்றும் நடைமுறையாக உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதனால், தொழில் நிறுவனங்களில் 12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்கு பேரவையில் காங்கிரஸ், மதிமுக, மமக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சி, கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்புகளுக்கு மத்தியில் 12 மணி நேர வேலை தொடர்பான 2023ம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது.

தினசரி 12 மணி நேரம் என வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுப்பு என்ற முறையை இச்சட்டம் கொண்டுள்ளது. இது தொழிலாளர்களின் விருப்ப தேர்வாகவே இருக்கும், கட்டாயம் அல்ல, அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சட்டம் இல்லை, விரும்பக்கூடிய தொழிற்சாலைகள், தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்த சட்டம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த சட்ட மசோதாவிற்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரசு கொண்டுவந்துள்ள இந்த 12 மணிநேர சட்ட மசோதா தொழிலாளர்களுக்கு எதிரானது, அவர்களின் வயிற்றில் அடிக்கும் இந்த சட்ட மசோதாவை அரசு, உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

12 மணி நேர வேலை சட்டமசோதா; இபிஎஸ் எதிர்ப்பு.!