சித்த மருத்துவர் ஷர்மிகா மீது மேலும் 2 பேர் புகார்..!

சித்த மருத்துவர் ஷர்மிகா மீது, 2 பேர் இந்திய மருத்துவ ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளனர்.

சித்த மருத்துவர் ஷர்மிகா மீது, 2 பேர் இந்திய மருத்துவ ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளனர்.

சமீப காலமாக சித்த மருத்துவர் ஷர்மிகாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், உடல் எடை குறைப்பு, கர்ப்பம் தரித்தல் குறித்த ஷர்மிகாவின் வீடியோக்கள் சர்ச்சையானது.

தினமும் நான்கு ஸ்பூன் நெய் சாப்பிட்டால் முகம் பொலிவாகும், ஒரு குலாப் ஜாமுன் சாப்பிட்டால் ஒரே நாளில் மூன்று கிலோ எடை கூடும், பெண்கள் கவிழ்ந்து படுத்தால் மார்பக புற்றுநோய் உண்டாகும், பெண்கள் நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகும் போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி இருந்தார்.  இதனை தொடர்ந்து இந்திய மருத்துவ ஆணையரகம் தாமாக முன் வந்து இரண்டு கட்ட விசாரணை நடத்தியது.

இந்த நிலையில், தற்போது, சித்த மருத்துவர் ஷர்மிகாவின் வீடியோவில் கூறிய மருத்துவ அறிவுரைகளைப் பார்த்து, சிகிச்சை எடுத்ததில் தங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டதாக 2 பேர் இந்திய மருத்துவ ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளனர்.