நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள் – ஓபிஎஸ் ட்வீட்..!

நடிகர்களில் திலகமாக திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாளான இன்று அன்னாரது புகழையும் கலைத்திறனையும் போற்றி வணங்குகிறேன் என ஓபிஎஸ் ட்வீட்.

நடிகர்களில் திலகமாக திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாளான இன்று அன்னாரது புகழையும் கலைத்திறனையும் போற்றி வணங்குகிறேன் என ஓபிஎஸ் ட்வீட்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து,எ அவரது உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், அரசியல் பிரபலங்கள் பலர் அவரது புகழை போற்றி இணைய பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தன்னுடைய அபரிமிதமான நடிப்பாற்றல் மூலம் நடிப்பில் தனக்கென்று ஒரு நடிப்பிலக்கணத்தை வகுத்து, தான் ஏற்றுக் கொண்ட கதைப் பாத்திரமாகவே வாழ்ந்து, நடிகர்களில் திலகமாக திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாளான இன்று அன்னாரது புகழையும் கலைத்திறனையும் போற்றி வணங்குகிறேன்!’ என பதிவிட்டுள்ளார்.

unknown node