இன்று நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்..!

நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று சென்னையில் நடைபெற உள்ளது. இக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட

நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று சென்னையில் நடைபெற உள்ளது. இக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை தொடர்ந்து, தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட உள்ளனர். இந்நிலையில், நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று சென்னையில் நடைபெற உள்ளது. இக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.