உக்ரைனில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை ‘ஆப்ரேஷன் கங்கா’ திட்டத்தின் மூலம் மத்திய அரசு மீட்டுள்ளாது. இதனையடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள், உக்ரைனில் சிக்கியிருந்த இந்திய மாணவர்களை மீட்டதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அந்த கடிதத்தில், உங்கள் துடிப்பான தலைமையின் கீழ் இந்திய அரசு, போரில் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இருந்து அனைத்து இந்திய மாணவர்களையும் வெளியேற்றியது மட்டுமல்லாமல், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச குடிமக்களையும் வெளியேற்றி ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தை வெற்றியடைய செய்ததை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
உக்ரைனில் இருந்து அனைத்து இந்தியர்களையும் வெளியேற்றுவதற்கு இந்திய அரசு எடுத்த விரைவான மற்றும் பயனுள்ள நடவடிக்கைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் இருந்து அனைத்து இந்தியர்களையும் வெளியேற்றுவதற்கு இந்திய அரசு எடுத்த விரைவான மற்றும் பயனுள்ள நடவடிக்கைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
unknown node