முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் – அதிமுக கோரிக்கை

AIADMK member Pollachi Jayaraman has said that today, early elections should be held in May as the sun is high.

மே மாதத்தில் வெயில் அதிகம் என்பதால் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை பதிவிக்கலாம் வரும் மே 24-ம் தேதியுடன் முடிவடைவதை தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணைய பொதுச் செயலாளர் உமேஷ் சின்கா தலைமையிலான உயர்மட்ட குழு இன்று தமிழகம் வந்தது.பின்பு இந்த தேர்தல் ஆணையம் குழுவினர் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.ஆலோசனைக்கு பின்னர் அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமன் கூறுகையில், ஏப்ரல் மாதத்தில் சட்டசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என அதிமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.மே மாதம் வெயில் அதிகமாக இருக்கும் .இதனால்  முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.