முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் – கே.பி.முனுசாமி பேச்சு

AIADMK Deputy Coordinator K P Munuswamy reiterates that Edappadi Palaniswami will be the Chief Ministerial face of the alliance led by party

50 ஆண்டு காலமாக எந்த தேசிய கட்சிகளும் உள்ளே வரவிடமுடியாமல் தமிழகத்தை காத்தது திராவிட இயக்கம் என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக தேர்தல் பிரச்சார தொடக்க பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள YMCA மைதானத்தில் தொடங்கியுள்ளது.இந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசுகையில் ,அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான்.

இந்திய துணைகண்டத்தில் தமிழகத்திற்கு தனி வரலாறு உண்டு. தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமையை நிலையாட்டியவர் பெரியார். தொடர்ந்து பெரியாரால் பாடம்புகட்டப்பட்டவர் அறிஞர் அண்ணா.ஜெயலலிதா, கருணாநிதி என்ற ஆளுமைகள் இல்லாத தமிழகத்தில் இடையில் புகுந்து பலன் பெறலாம் என சிலர் நினைக்கின்றனர். 50 ஆண்டு காலமாக எந்த தேசிய கட்சிகளும் உள்ளே வரவிடமுடியாமல் தமிழகத்தை காத்தது திராவிட இயக்கம். 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை.எந்த தேசிய கட்சி இப்படி பேசி கூட்டணிக்கு வந்தாலும் அவர்கள் அதிமுகவுக்கு தேவையில்லை என்று பேசியுள்ளார்.