அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் – ஓபிஎஸ் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல்...!

உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை கேட்டும், அதிமுக பொதுக்குழு தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்த நிலையில்,  இந்த வழக்கு நேற்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு விசாரணையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. சுமார் 7 மணிநேரம் நடந்த இந்த வழக்கு விசாரணையில் தற்பொழுது இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

ஓபிஎஸ் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் ஓபிஎஸ் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்வதில்  தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், தற்போது ஓபிஎஸ் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற பதிவுத்துறையில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் எழுத்துப்பூர்வ வாதங்களை  அளித்தார். இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளதாகவும், அவ்வாறு உத்தரவு பிறப்பிக்காவிட்டால், திங்கட்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் – ஓபிஎஸ் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல்...!