கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டியிடும்..! – ஓபிஎஸ்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டியிடும் என ஓ.பன்னீர்செல்வம் பேட்டி.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டியிடும் என ஓ.பன்னீர்செல்வம் பேட்டி.

சென்னையில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகின்றனர். இந்த நிகழ்வில் ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுக பொதுக்குழு தீர்மானம் மற்றும் பொதுச்செயலாளர் விவகாரம் குறித்து பேசினார்.

பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி :

அவர் பேசுகையில், தொண்டர்கள்தான் அதிமுக பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும், நீதிமன்றத்தில் தங்கள் தரப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் இன்னும் கிடைக்கவில்லை, இன்று அதிமுக ஒரு அரசியல் மாயையில் சிக்கியுள்ளது என்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.

ஓபிஎஸ் பேட்டி :

அவரத்தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், வருகின்ற கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டியிடப்போவதாக தெரிவித்தார். மேலும், பேசிய அவர்  அதிமுக பிளவுபட்டு விடக் கூடாது என்பதற்காக ஈரோடு கிழக்கில் எங்கள் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற்றோம்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பொதுமக்கள் அளித்த தீர்ப்பு இபிஎஸ்-ஐ ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது என்று விமர்சித்தார். இந்நிலையில், கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 10ம் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.