மத்திய அரசு சார்பில் 18ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் – விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி!

Parliamentary Affairs Minister Pralhad Joshi has called for an all party meeting on the 18th

வரும் 18ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி.

நாடாளுமன்ற கூட்டத்தொடரையொட்டி வரும் 18ம் தேதி அனைத்துக்கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. 18ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பங்கேற்க இருக்கின்றனர்.

இதனிடையே, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எப்படி செயல்படுவது என்பது பற்றி 18ம் தேதி பாஜக ஆலோசனை மேற்கொள்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரானது ஜூலை 19 ஆம் தொடங்கி ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்திருந்தார். தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.