மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக அனைத்து கட்சி எம்.பிக்கள் இன்று சந்திப்பு ...!

All party MPs in Tamil Nadu are scheduled to meet Union Minister Amit Shah today.

மத்திய அமைச்சர் அமித்ஷாவை தமிழக அனைத்து கட்சி எம்.பிக்கள் இன்று சந்திக்க உள்ளனர்.

தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக ஏழு பேர் கொண்ட தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் குழு முயற்சி மேற்கொண்டது. ஆனால் தமிழக எம்.பிக்களுக்கு மத்திய அமைச்சர் சந்தித்து பேச நேரம் வழங்கவில்லை.

இதற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்த நிலையில், இன்று தமிழக அனைத்து கட்சி எம்.பிக்கள் கொண்ட குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக டெல்லி புறப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணியளவில் இந்த குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.