நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் – ராகுல் காந்தி!

Rahul Gandhi insists that all people in the country should be vaccinated.

நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தல்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் பரவிக் கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் கொரோனாவை ஒழிக்க மக்கள் தடுப்பூசி போட வேண்டும் என தற்போது அதிக அளவில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இதனால் நாட்டின் பல்வேறு இடங்களிலும் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட தொடங்கி உள்ளது. இந்த தடுப்பூசி தட்டுப்பாட்டிற்கு தீர்வு காண வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், தற்போது இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் எனவும், தடுப்பூசிக்காக ஆன்லைனில் பதிவு செய்வது மட்டும் போதாது, இணைய வசதி இல்லாத ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,

unknown node