உத்தம தியாகி ஈஸ்வரனுக்கு திருவுருவ சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு..!

உத்தம தியாகி ஈஸ்வரனுக்கு ஈரோடு மாவட்டத்தில் திருவுருவ சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

உத்தம தியாகி ஈஸ்வரனுக்கு ஈரோடு மாவட்டத்தில் திருவுருவ சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

06.09.2021 அன்று நடைபெற்ற சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடரில், 2021-2022ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கையின் போது, மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் “கொங்கு மண்டலத்தில் ஏறக்குறைய இரண்டு இலட்சம் ஏக்கர் பாசனம்பெறும் நீர்ப்பாசனத் திட்டமான கீழ்பவானி பாசனத் திட்டம் கொண்டுவர முக்கியக் காரணகர்த்தாவாக இருந்த ஈரோடு தொகுதியின் மேனாள் சட்டமன்ற உறுப்பினரும், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற சுதந்திர போராளியான உத்தம தியாகி ஈஸ்வரனுக்கு ஈரோடு மாவட்டத்தில் திருவுருவ சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தத்த்து.

இந்த நிலையில், தற்போது உத்தம தியாகி ஈஸ்வரனுக்கு ஈரோடு மாவட்டத்தில் திருவுருவ சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

unknown node
உத்தம தியாகி ஈஸ்வரனுக்கு திருவுருவ சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு..!