#BREAKING: பிப்ரவரி 25-ம் தேதி அமமுக செயற்குழு கூட்டம்..!

The meeting of the Executive and General Committee of the AMMK is scheduled to be held on Thursday the 25th at 9 am.

அமமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் 25-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மக்கள் நலக் கொள்கைகளை வாழ வைப்பதற்காக போராடி வரும் நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் கழகத்துணைத் தலைவர் S.அன்பழகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களின் தலைமையில் வருகின்ற 25-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக பின்பற்றி தமிழகத்தின் 10 இடங்களை காணொளி வாயிலாக இணைத்து நடைபெறும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட ஊர்களில் தங்களுக்கான அழைப்பிதழோடு வந்து கலந்துகொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.