அராஜக ஆட்சி நடத்துகிறது அதிமுக அரசு – உதயநிதி ஸ்டாலின்

Anarchic rule AIADMK government - Udayanithi Stalin

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.இதனால் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.திமுக சார்பில் மக்கள் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது.தற்போது உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.மேலும்விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்றும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று திமுக இளைஞரணி  செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கரூர் வாலாஜா பேட்டை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் .மாணவர்களுக்கு கல்விக்கடன் ரத்து செய்யப்படும் .தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு – பொள்ளாச்சியில் பெண்களுக்கு பாலியல் கொடுமைகள் – கொள்ளையடிப்பதற்காகவே உறவினர்களுக்கு டெண்டர் என அராஜக ஆட்சி நடத்துகிறது அதிமுக அரசு என்று பேசியுள்ளார்.