தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ், ஈபிஎஸ்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில்,’தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர், அன்பு சகோதரர் அண்ணாமலைஅவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். அவரது சமூக பணி சிறக்க வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
unknown nodeஇதுகுறித்து ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இன்று பிறந்தநாள் விழா காணும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அன்புச்சகோதரர் அண்ணாமலைஅவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். திரு.அண்ணாமலை அவர்கள் அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்! என பதிவிட்டுள்ளார்.
unknown node