அண்ணாமலை பாதயாத்திரை – தேமுதிகவுக்கு அழைப்பு...!

An invitation to Demudika to participate in the Padayatra conducted by Tamil Nadu BJP President Annamalai.

vijayakanth

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் நடத்தும் பாதயாத்திரையில் கலந்துகொள்ள தேமுதிகவுக்கு அழைப்பு.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், ‘என் மண், என் மக்கள்’ என்ற பாதயாத்திரையை ராமேஸ்வரத்தில் இருந்து ஜூலை 28-ஆம் தேதி தொடங்குகிறார். தமிழகம் முழுவதும் 6 மாதங்கள் பாதயாத்திரை மேற்கொள்ளும் அண்ணாமலை, 225 ஊர்களில் மக்களை சந்திக்கிறார்.

இந்த 6 மாத கால நடைபயணத்தின் போது பாஜக தேசியத் தலைவர்கள் பலரும், அண்ணாமலையுடன் கலந்து கொள்ள உள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது, இந்த பாதயாத்திரையில் கலந்துகொள்ள தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.