இந்திய ஆங்கிலயர்களிடம் இருந்து கரியப்பா அவர்களிடம் இந்திய இராணுவம் கைமாறிய தினமான ஜனவரி 15ஐ ஒவ்வொரு ஆண்டும் ராணுவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறோம்.
இதையொட்டி இந்திய பிரதமர் மோடி, சமூக வலைதளமான டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவம் வீரத்திற்கும் போர் திறனுக்கும் பெயர் போனது என்றும் இந்திய ராணுவம், நாட்டு மக்களின் தேவைக்கு ஏற்ப தன்னை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கும் திறன் படைத்தது என்று பிரதமர் மோடி இந்திய இராணுவத்திற்க்கு புகழாரம் சூட்டி உள்ளார்.இதேபோல், சமீமா என்ற கர்ப்பிணிப் பெண்ணிற்கு உரிய நேரத்தில் இந்திய ராணுவம் செய்த உதவியை குறித்த வீடியோ ஒன்றையும் அதில் அவர் பதிவு செய்துள்ளார்.
unknown nodeஇதேபோல் இராணுவதின கொண்டாட்டம் டெல்லியில் உள்ள கரியப்பா மைதானத்தில் நடந்தது. இதில், ராணுவத்தினரின் வண்ணமிகு அணிவகுப்புகள் கண்ணைக் கவர்ந்தன. முழுதும் ஆண் வீரர்கள் பங்கேற்ற அணிவகுப்புக்கு கேப்டன் தானியா ஷேர் கில் என்ற பெண் ராணுவ அதிகாரி தலைமயேற்று நடத்தியது அனைவரையும் கவரும் விதமாக அமைந்தது.